< Back
மாநில செய்திகள்
தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு சீமான் வாழ்த்து
மாநில செய்திகள்

தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு சீமான் வாழ்த்து

தினத்தந்தி
|
21 Aug 2024 11:55 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி நாளை அறிமுகப்படுத்தப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்துள்ளார். இருப்பினும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி நாளை காலை அறிமுகப்படுத்தப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாளை கட்சி கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நாளை (22-08-2024) அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் அவர்கள் லட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்