< Back
மாநில செய்திகள்
பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... கடலூரில் பரபரப்பு
மாநில செய்திகள்

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... கடலூரில் பரபரப்பு

தினத்தந்தி
|
6 July 2024 5:29 PM IST

பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர். பாமக கட்சி பிரமுகராக உள்ளார். வன்னியர் சங்க முன்னாள் கடலூர் நகர தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இவர் இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பர் அவரை அரிவாளால் சரமாடியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். உடலில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையின் அனுமதித்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சங்கரின் ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்து வருவதால், அப்பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்