போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்.. நீதிபதி வேதனை
|பள்ளி மாணவர்கள் கைகள் வரை போதைப்பொருள் வந்துவிட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு சென்ட்ரல் போலீசார் சோதனையில் 21 கிலோ மதிப்பிலான ஹெராயின் சிக்கியது. இந்த வழக்கு தொடர்பாக மாரிமுத்து, அன்சார் அலி, இம்ரான்கான், கசாலி மரைக்காயர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து மதுரை முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் வழக்கை முறையாக விசாரிக்காத. ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கில் உரிய வழிகாட்டுதல் வழங்காமல் இருந்ததாக தெரிந்தால், சென்ட்ரல் துணை காவல் கண்காணிப்பாளர் போதைப்பொருள் தடுப்பு காவல்நிலைய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போது பள்ளி மாணவர்கள் கைகள் வரை போதைப்பொருள் வந்துவிட்டதாக கூறிய நீதிபதி, போதைப் பொருள்களைத் தடுக்க மாவட் டந்தோறும் ஒரு பொறுப்பு அதிகாரி நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அரசு செயல்படுத்தி இருந்தால் இது போன்ற தவறுகள் நடைபெறாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.