< Back
மாநில செய்திகள்
மரக்கிளைகளை வெட்டும்போது தவறி விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர்: முதல்-அமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
மாநில செய்திகள்

மரக்கிளைகளை வெட்டும்போது தவறி விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர்: முதல்-அமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Aug 2024 9:18 AM IST

மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டல சாந்திநகர் வரிவசூல் மைய கட்டிடத்தில் கடந்த 09.08.2024 அன்று காலை சுமார் 10.00 மணியளவில் அன்னை இந்திரா சுயஉதவிக்குழுவின் தூய்மைப் பணியாளராகப் பணிபரிந்துவந்த பாலசுப்பிரமணியன் (வயது 24) த/பெ.முனிஸ்வரன் என்பவர் மரக்கிளைகளை வெட்டும்போது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று முன்தினம் (18.08.2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்