கார் பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
|2,251 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
"திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள மருதூர் மேலக்கால் வாய்க்கால், மருதூர் கீழக்கால் வாய்க்கால், தென்கால் வாய்க்கால் மற்றும் வடகால் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களின் கீழுள்ள 13,506 ஏக்கர் நேரடி பாசனப்பரப்பு நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு வருகிற 15-ந்தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை (80 நாட்கள்) 2,251 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள மருதூர் மேலக்கால் வாய்க்கால், மருதூர் கீழக்கால் வாய்க்கால், தென்கால் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களின் கீழுள்ள 13,506 ஏக்கர் நேரடி பாசன பரப்புகள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.