< Back
மாநில செய்திகள்
சிறார்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து; ஜூன் 1ம் தேதி முதல் அமல்
மாநில செய்திகள்

சிறார்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து; ஜூன் 1ம் தேதி முதல் அமல்

தினத்தந்தி
|
29 May 2024 6:20 PM IST

வாகனம் ஓட்டி பிடிபடும் சிறார்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாலை விபத்துக்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் சமீப காலமாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் வாகனம் ஓட்டுவதால்தான் அதிக விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட விபத்து குறையவில்லை. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தாலோ அல்லது இறந்தாலோ வாகனத்தை மைனர் அல்லது யாரேனும் இயக்கினால் மட்டுமே வாகன உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு பெற முடியும் என்ற மத்திய மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ திருத்தம் செய்ததையடுத்து தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், 18 வயது பூர்த்தியடையாத சிறார்கள் கார் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும். வாகனத்தின் ஆர்.சி.யை ரத்து செய்யும் இந்த விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலாகிறது. மேலும் வாகனம் ஓட்டி பிடிபடும் சிறார்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.

மேலும் செய்திகள்