< Back
மாநில செய்திகள்
ரத்தன் டாடா பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்: அன்புமணி ராமதாஸ்
மாநில செய்திகள்

ரத்தன் டாடா பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்: அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
10 Oct 2024 9:54 AM IST

ரத்தன் டாடா மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் புகழ்பெற்ற டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், வணிகத்தில் அறத்தைக் கடைபிடித்தவருமான ரத்தன் டாடா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த ரத்தன் டாடா, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தாலும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்தவர்.

ஏழைகளுக்கும் மகிழ்ந்து கிடைக்க வேண்டும் என்று போராடியவர். அவரது மறைவு இந்தியத் தொழில்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். இந்தியத் தொழில்துறையில் அறம் என்றால் ரத்தன் டாட்டாவின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வரலாற்றில் அவரது பெயர் நிலைத்து நிற்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்