< Back
மாநில செய்திகள்
முக்கியத் துறைகளில் இந்தியாவின் கொள்கைகளை வகுக்க துணை நின்றவர் ரத்தன் டாடா: ராமதாஸ்
மாநில செய்திகள்

முக்கியத் துறைகளில் இந்தியாவின் கொள்கைகளை வகுக்க துணை நின்றவர் ரத்தன் டாடா: ராமதாஸ்

தினத்தந்தி
|
10 Oct 2024 11:52 AM IST

ரத்தன் டாடா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகப்புகழ் பெற்ற தொழில் வணிக நிறுவனமான டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்தியாவின் தொழில் வணிக வரலாற்றையும், தாராளமயமாக்கல் வரலாற்றையும் ரத்தன் டாடா அவர்களை விலக்கி விட்டு எழுத முடியாது. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் 1992-ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற ரத்தன் டாடா தமது குழுமத்தை உலகம் முழுவதும் பரப்பினார். கல்வி, சுகாதாரம், துப்புரவு உள்ளிட்டவற்றுக்காக வாரி வழங்கியவர். முக்கியத் துறைகளில் இந்தியாவின் கொள்கைகளை வகுக்க துணை நின்றவர். இந்தியாவில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திய ரத்தன் டாடா வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்