< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தண்டவாள சீரமைப்பு பணி; அரக்கோணம் வழியில் மின்சார ரெயில்கள் ரத்து
|30 Aug 2024 9:58 AM IST
தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக அரக்கோணம் வழியில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் 'அம்ரித் பாரத்' திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே தண்டவாள சீரமைப்பு பணி இன்று நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி இந்த வழித்தடத்தில் இன்றும், நாளையும் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்சார ரெயில்கள் திருவள்ளூர் வரை மட்டுமே இயங்கும் எனவும், திருவள்ளூரில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்சார ரெயில்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.