< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராகுல் காந்தி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
|19 Jun 2024 10:07 AM IST
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிறந்தநாளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிறந்தநாளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
பிறந்தநாள் வாழ்த்துகள் அன்புச்சகோதரர் ராகுல் காந்தி. நாட்டு மக்கள் மீதான உங்களது அர்ப்பணிப்பு, உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும், வெற்றியடையவும் வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.