< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை: வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

புதுக்கோட்டை: வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
20 Sept 2024 12:24 PM IST

புதுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் சென்ற கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா. இவர் இன்று பணி நிமித்தமாக திருமயம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். காரை டிரைவர் காமராஜ் ஓட்டினார்.

இந்நிலையில், புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே கார் சென்றபோது சாலையில் எதிரே அரசு பஸ்சும், பைக்கும் வந்துள்ளது. பஸ்சை முந்திக்கொண்டு வந்த பைக் எதிரே வந்த வருவாய் கோட்டாட்சியரின் கார் மீது வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பைக்கில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வருவாய் கோட்டாட்சியரின் கார் டிரைவர் காமராஜுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த கார் டிரைவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்