< Back
மாநில செய்திகள்

கோப்புப்படம்
மாநில செய்திகள்
மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி

27 May 2024 11:04 PM IST
அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததன் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு தொடர்ந்து 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், 3 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்ததை அடுத்து, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.