வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்: 10 இடங்களில் இன்று நடக்கிறது
|சென்னை உள்பட 10 இடங்களில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெறுகிறது.
சென்னை,
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 'நிதி ஆப்கே நிகத்' (வைப்பு நிதி உங்கள் அருகாமையில்) என்ற தலைப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை குறைதீர்க்கும் முகாமினை நடத்த உள்ளது.
இதுதொடர்பாக வருங்கால வைப்புநிதி கமிஷனர் ஜெய் சங்கர் ராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை வடக்கு மண்டலம் சார்பில் மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலையில் உள்ள பொது சுகாதார மையம், அம்பத்தூர் மண்டலம் சார்பில் மாதவரம் மில்க் காலனியில் உள்ள டி.சி.எம்.பி.எப். நிறுவனம் மற்றும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள வி.ஐ.டி. வளாகம், தாம்பரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் சதானந்தபுரத்தில் உள்ள மாதா இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜியில் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற உள்ளது.
இதேபோல வேலூர், புதுச்சேரி மண்டல அலுவலகங்களின் சார்பிலும் என ஒட்டுமொத்தமாக 10 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.