< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

தினத்தந்தி
|
28 May 2024 1:59 PM IST

பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ந் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார்.

குமரி,

பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ந் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார். அன்று மாலை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு அவர் படகு மூலம் செல்கிறார். அந்தப் பகுதியை அவர் சுற்றிப் பார்க்கிறார்.

பின்னர் அங்குள்ள தியான மண்டபத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபட உள்ளார். 3 நாட்கள் தியானத்திற்குப் பின்னர் ஜூன் 1-ந் தேதி விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார். பின்னர் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரதமர் தியானம் மேற்கொள்ள உள்ள விவேகானந்தர் மண்டபத்தைச் சுற்றி கடலோர பாதுகாப்பு படை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி சுற்றுலா பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்