< Back
மாநில செய்திகள்
காதலிப்பதாக கூறி உல்லாசம்.. பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
மாநில செய்திகள்

காதலிப்பதாக கூறி உல்லாசம்.. பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
8 July 2024 8:45 AM IST

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து மாணவியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் வவிக்னேஸ்வரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்