< Back
மாநில செய்திகள்
பொங்கல் முன்பதிவு - காலியான டிக்கெட்டுகள்... பயணிகள் ஏமாற்றம்
மாநில செய்திகள்

பொங்கல் முன்பதிவு - காலியான டிக்கெட்டுகள்... பயணிகள் ஏமாற்றம்

தினத்தந்தி
|
13 Sept 2024 9:51 AM IST

டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் ரெயில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலானோர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 13-ந்தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க்கிழமை), 15-ந்தேதி மாட்டுப்பொங்கல் (புதன்கிழமை), 16-ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11-ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் அனைத்து ரெயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால், காலை 5 மணி முதல் டிக்கெட் கவுன்டரில் காத்திருந்த பயணிகளுக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்தான் கிடைத்துள்ளது.

ஜனவரி 12-ந் தேதிக்கு பயணம் செய்ய நாளையும், போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ந்தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என்று தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்