< Back
மாநில செய்திகள்
சென்னையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது
மாநில செய்திகள்

சென்னையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

தினத்தந்தி
|
26 July 2024 12:25 PM IST

தனக்கு வெளியே இருக்க பிடிக்கவில்லை எனவும், தான் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதால் பெட்ரோல் குண்டு வீசிய நபர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா நகர் அருகேயுள்ள அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த பாலா என்ற பாலமுரளி, திருச்சியில் வசித்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அன்னை சத்யா நகர் பகுதிக்கு மீண்டும் வந்துள்ளார்.இந்நிலையில், இவர், அன்ணா நகர் மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார்.

இந்த குண்டு சுவற்றில் பட்டு கீழே விழுந்துள்ள நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் தேடி வந்தனர். இதில், பெட்ரோல் குண்டு வீசிய பாலா என்ற பாலமுரளியை போலிசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தனக்கு வெளியே இருக்க பிடிக்கவில்லை எனவும், தான் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதால் அன்னை சந்யா நகரில் உள்ள போலீஸ் பூத் மற்றும் மதுபானக் கடையை நோக்கி குண்டுகளை வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அண்ணா நகர் போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்