< Back
தேசிய செய்திகள்
ராஜ்நாத் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
தேசிய செய்திகள்

ராஜ்நாத் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

தினத்தந்தி
|
10 July 2024 3:40 PM IST

ராஜ்நாத் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"ராஜ்நாத் சிங்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் மிகவும் மதிப்பிற்குரிய மந்திரிசபை உறுப்பினர் ஆவார். அவர் தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பொது வாழ்வில் மிகவும் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்புத்துறையை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வாழ்த்து பதிவிற்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார். அதே போல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் ராஜ்நாத் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்