< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடிக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது - ஜெயக்குமார் பேட்டி
மாநில செய்திகள்

பிரதமர் மோடிக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது - ஜெயக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
10 Jun 2024 8:50 AM IST

அ.தி.மு.க.வை யாரும் அழிக்க முடியாது என்று ஜெயக்குமார் கூறினார்.

திருத்தணி,

திருத்தணியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பா.ஜனதா மதவாத சாதி அரசியலை கைவிட வேண்டும். இந்த அரசியலால் தான் வடமாநிலங்களில் மக்கள் பா.ஜனதாவுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு பா.ஜனதா தனித்து 400 இடங்கள் வெற்றி பெறுவோம் என மார்தட்டிக் கொண்டிருந்தனர். தற்போது 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு தற்போது கடிவாளம் போடப்பட்டுள்ளது. அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 6600 பேருக்கு மட்டுமே அரசு பணி வழங்குவதற்கு தற்போது தேர்வு நடத்தப்பட்டது. அ.தி.மு.க., 52 ஆண்டுகளாக இயங்கி வரும் பெரிய கட்சி. இதை அழிக்க யாரும் முடியாது. வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சி பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்