< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஒழுங்கு நடவடிக்கை: தி.மு.க.வில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி நிரந்தரமாக நீக்கம்
|30 July 2024 2:17 PM IST
தி.மு.க.வில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தி.மு.க. கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் கா.செய்யது இப்ராகிம், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.