< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விடுமுறை தினம், ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த பொதுமக்கள்
|4 Aug 2024 11:29 AM IST
விடுமுறை தினம், ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி,
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்றுவிடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது.
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் திரண்டு சூரியன் உதயமாகும் காட்சியை உற்சாகமாக கண்டு களித்தனர். பின்னர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் சென்று ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தனர்.
இதற்கிடையே, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் குவிந்த பொது மக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்படுகிறது.