< Back
மாநில செய்திகள்
பழனியில் முழுமையாக ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு
மாநில செய்திகள்

பழனியில் முழுமையாக ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு

தினத்தந்தி
|
22 Sep 2024 1:23 AM GMT

பழனி கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தரமாகவே வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை,

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பழனி கோவில் பஞ்சாமிர்தம் தொடர்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் விஷம பிரசாரம் செய்துள்ளது குறித்து கோவில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பிரிவு கண்காணிப்பாளரால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பழனியில் முழுமையாக ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது. தேவைக்கு அதிகமாக தேவைப்படும் நிகழ்வில் தனியார் நிறுவனத்திடம் வாங்கப்படுகிறது. பழனி கோவிலில் வழங்கப்படும் இலவச பஞ்சாமிர்தம் மற்றும் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தங்கள் அனைத்தும் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தரமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்