< Back
மாநில செய்திகள்
எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது - துரைமுருகன்
மாநில செய்திகள்

எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது - துரைமுருகன்

தினத்தந்தி
|
21 Jun 2024 10:39 AM IST

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சென்னை,

தமிழக சட்டசபையில் 2-ம் நாள் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து சட்டசபையில் இருந்து அதிமுகவினரை அவைக்காவலர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

இந்த சூழலில் சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது;

கேள்வி நேரம் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த விவகாரமாக இருந்தாலும் கேள்வி நேரம் முடிந்த பிறகுதான் பிரச்சினைகள் குறித்து அவையில் எழுப்ப வேண்டும். யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். கள்ளச்சாராயம் குறித்தோ, ஆட்சி குறித்தோ கேள்வி கேட்க அவர்களுக்கு உரிமை உண்டு. எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. வருந்தத்தக்கது."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்