< Back
மாநில செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது - துரை வைகோ
மாநில செய்திகள்

'ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது' - துரை வைகோ

தினத்தந்தி
|
22 Sept 2024 7:59 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. அது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்திய அரசியல் சாசனத்திற்கும் எதிரானது.

தி.மு.க. தலைமையிலான எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த கூட்டணியில் ஏதாவது பிரச்சினை வராதா என்பது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலரின் விருப்பமாக இருக்கலாம்.

ஆனால் எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைவரும் நல்ல புரிந்துணர்வோடு இருக்கிறார்கள். பா.ஜ.க. போன்ற மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேரூன்றக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்