< Back
மாநில செய்திகள்
திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர்உயிரிழப்பு..8 பேர் காயம்
மாநில செய்திகள்

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர்உயிரிழப்பு..8 பேர் காயம்

தினத்தந்தி
|
8 Oct 2024 1:37 PM IST

வெடி விபத்தில் 10 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

திருப்பூர் ,

திருப்பூரில் பாண்டியன் நகரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார் .பாண்டியன் நகர் சத்யா காலனியில் வீட்டில் ஏற்பட்ட இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடி விபத்தில் 10 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

சத்யா காலனியில் கார்த்தி என்பவர் கோயில் விசேஷங்களுக்கு வீட்டில் நாட்டு வெடிகள் தயாரித்து கொடுத்து வந்ததாகவும் அப்போது திடீரென வெடி விபத்து நிகழ்ந்தததாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் செய்திகள்