< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஓணம் பண்டிகை: நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் வாழ்த்து
|15 Sept 2024 10:37 AM IST
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், தமிழிலும், மலையாளத்திலும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.