< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயங்க நாளை முதல் தடை
|13 Jun 2024 2:09 PM IST
தமிழகத்தில் நாளை முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளை முதல் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி இயங்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் நிராகரித்துள்ளார். அரசின் இந்த உத்தரவால் நாளை முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.