< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆம்னி பஸ் டிரைவரின் கைகளை கட்டி வைத்து சரமாரி தாக்குதல்- வீடியோ வைரல்
|25 July 2024 8:27 AM IST
மாட்டுத்தாவணியில் இருந்து ஆம்னி பஸ் இயக்கும் நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் அந்த நிறுவன பஸ் டிரைவர் தாக்கப்பட்டார்.
மதுரை,
மதுரை மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து, சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கும், பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்கும் ஏராளமான ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மாட்டுத்தாவணியில் இருந்து ஆம்னி பஸ் இயக்கும் நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் அந்த நிறுவன பஸ் டிரைவர் தாக்கப்பட்டார். பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து, டிரைவரின் கைகளை ஜன்னலில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
இது சம்பந்தமான வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த டிரைவர் பயணிகளை ஏற்றியதற்கான பணத்தை தனது போன் மூலம் பெற்றதாகவும், அதற்காக அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.டிரைவர் மீதான தாக்குதல் தொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.