< Back
மாநில செய்திகள்
விஜய்யின் மாநாட்டுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது: கிருஷ்ணசாமி பேட்டி
மாநில செய்திகள்

விஜய்யின் மாநாட்டுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது: கிருஷ்ணசாமி பேட்டி

தினத்தந்தி
|
13 Sept 2024 10:19 AM IST

மதுவில்லா ஆட்சியை கொடுப்பதற்கு திமுக-அதிமுக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

மதுரை,

மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 16-ந்தேதி பேரணி சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளோம். பூரண மது விலக்கை தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடாது. தமிழகத்தில் இருந்து மதுவை அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரக்கூடாது என தடுக்கக்கூடாது. விஜய்யை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்கள் கைகளில் உள்ளது. விஜய்யின் மாநாட்டுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது. விஜய் மாநாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது. விஜய் அரசியல் களத்திற்கு வரட்டும். அவரை நேரில் சந்திக்கலாம்.

மதுவில்லா ஆட்சியை கொடுப்பதற்கு திமுக-அதிமுக உத்தரவாதம் அளிக்க வேண்டும். மது ஒழிப்பில் அந்த இரு கட்சிகளும் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். பூரண மதுவிலக்கில் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்