< Back
மாநில செய்திகள்
நீலகிரி முன்னாள் பா.ஜ.க எம்.பி மாஸ்டர் மதன் உடல்நலக்குறைவால் காலமானார்
மாநில செய்திகள்

நீலகிரி முன்னாள் பா.ஜ.க எம்.பி மாஸ்டர் மதன் உடல்நலக்குறைவால் காலமானார்

தினத்தந்தி
|
27 July 2024 1:15 PM IST

மாஸ்டர் மதன் உடலுக்கு பா.ஜ.க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

கோவை,

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்தவர் மாஸ்டர் மதன்(வயது93). இவர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்துள்ளார்.

அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக வீட்டில் இருந்தபடி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11.10 மணிக்கு வீட்டில் இருந்த மாஸ்டர் மதன் காலமானார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இன்று காலை அவரது வீட்டிற்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த மாஸ்டர் மதன் உடலுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்