< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

தினத்தந்தி
|
1 Aug 2024 8:17 AM IST

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்த விரிவான தகவல்கள் சோதனை நிறைவடைந்ததும் என்ஐஏ தரப்பிலிருந்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

பாமக பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கொலை வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க என்.ஐ.ஏ. தீவிரம் காட்டி வருகிறது.

ராமலிங்கம் கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்