< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
செய்திகள் சிலவரிகளில்...

12 Jun 2024 6:03 PM IST
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.
சென்னை,
* ஆந்திர முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
* விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பட் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
* காங்கோவில் முதல் பெண் பிரதமராக ஜூடித் சுமின்வா துலுகா பதவியேற்பு
*கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று வயநாட்டில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
* தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 29-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
*மத்திய நிதி மந்திரியாக பதவிஏற்ற நிர்மலா சீதாராமன் இன்று தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார் .
* அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி- கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு.
* டி20 உலகக் கோப்பை: நமீபியாவை எளிதில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி