< Back
மாநில செய்திகள்
காசு கொடு்த்து வாங்கிய மதுவை இப்படி ஊற்றுகிறீர்களே.. கட்டிங் கேட்ட மதுப்பிரியர் : பா ஜனதாவினர் நடத்திய போராட்டத்தில் ருசிகரம்
மாநில செய்திகள்

காசு கொடு்த்து வாங்கிய மதுவை இப்படி ஊற்றுகிறீர்களே.. கட்டிங் கேட்ட மதுப்பிரியர் : பா ஜனதாவினர் நடத்திய போராட்டத்தில் ருசிகரம்

தினத்தந்தி
|
24 Jun 2024 1:47 AM IST

கழிவுநீர் வாய்க்காலில் பா ஜனதா கட்சியினர் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவை வரிசையாக நின்று ஊற்றினர்.

கும்பகோணம்,

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியினர் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் டாஸ்மாக் மதுவை வாங்கி கழிவு நீர் வாய்க்காலில் கொட்டி மதுவை கைவிடுங்கள் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினா். பா ஜனதாவினர் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்ட போது மதுப்பிரியர் ஒருவர் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் பா ஜனதா கட்சியினர் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவை வரிசையாக நின்று ஊற்றினர். அப்போது இதைக்கண்டு ஆதங்கம் அடைந்த மதுப்பிரியர் ஒருவர் காசு கொடு்த்து வாங்கிய மதுவை இப்படி கழிவுநீர் வாய்க்காலில் ஊற்றுகிறீர்களே, அதை என்னிடம் கொடுங்கள் என கேட்பது போல சைகை செய்து பா ஜனதா கட்சியினரிடம் மதுபாட்டில்களை கேட்டார். ஆனால் இதை பொருட்படுத்தாத பா ஜனதா கட்சியினர் மதுவை கழிவுநீர் வாய்க்காலில் ஊற்றினர்.

பின்னர் ஒருவழியாக அந்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஒரு மதுபாட்டிலை வாங்கி கொண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றார். மதுவுக்கு எதிராக பா ஜனதா கட்சியினர் தீவிரமாக பேராராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது மதுப்பிரியா் ஒருவர் போராட்டத்தின் தீவிரத்தை உணராமல் கால்வாயில் ஊற்றிய மதுவை கேட்டு கெஞ்சிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்