< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சீர்காழி அருகே எஸ்.ஐ. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
|2 Aug 2024 12:59 AM IST
மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் படுகாயமடைந்தார்.
சீர்காழி,
சீர்காழி அருகே திருவெண்காட்டில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் (58 வயது) என்பவர் வீட்டில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணேசன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர் அவர் மீது அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசினார்.
இதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் படுகாயமடைந்தார். கைகள் மற்றும் கால்களில் தீக்காயம் அடைந்த நிலையில் கணேசன், சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.