நவராத்திரி விடுமுறை: நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் சேவை
|கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகிற 8, 9 தேதிகளில் சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* கோவையிலிருந்து இன்று (6-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06171), மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (7-ந்தேதி) காலை 10.30 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக போத்தனூர்செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06172), அதேநாள் மாலை 6 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 9-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06178), மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வரும் 10-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06179), மறுநாள் காலை 11.25 மணிக்கு வந்தடையும்.
சென்டிரல் - தூத்துக்குடி
* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 8-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில் (06186), மறுநாள் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து வரும் 9-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06187), மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
* திருச்சியில் இருந்து வரும் 11-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தவிர்த்து) வாரத்தின் 5 நாட்கள் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06190), அதேநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 11-ந்தேதி முதல் 31-ந்தேி வரையில் (திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தவிர்த்து) வாரத்தின் 5 நாட்கள் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), அதேநாள் இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.