தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்
|தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை,
தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் என்ற பெயரில் மத்திய அரசு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதாக கூறி மனிதநேய மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், விக்கிரவாண்டி, மதுரை கப்பலூர் உள்பட பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகனங்களை மறித்து மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சியினரை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.