< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி: 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்

தினத்தந்தி
|
15 July 2024 12:21 AM GMT

பராமரிப்பு பணி காரணமாக 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13352) நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை (செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய கிழமைகளில்) கோவை ஜங்ஷன் செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும். இந்த ரெயில் மதியம் 12.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும். அங்கிருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

எர்ணாகுளம்- கே.எஸ்.ஆர். பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12678) வருகிற 30-ந் தேதி வரை (செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய கிழமைகளில்) கோவை ஜங்ஷன் செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும். இந்த ரெயில் மதியம் 12.47 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்