< Back
மாநில செய்திகள்
மகாவிஷ்ணு விவகாரம்: பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி -   அமைச்சர் அன்பில் மகேஷ்
மாநில செய்திகள்

மகாவிஷ்ணு விவகாரம்: பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி - அமைச்சர் அன்பில் மகேஷ்

தினத்தந்தி
|
7 Sept 2024 5:33 PM IST

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக அவர் பேசியதாவது;

"ஒவ்வொரு குடிமகனும் அறிவுசார்ந்த அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு கூறியுள்ளது. அதனை பின்பற்றியே தமிழக முதல்-அமைச்சர் அமெரிக்காவில் முதலீட்டை ஈர்க்கும் பணியில் இருந்தாலும் மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக உடனடியாக அறிக்கை வெளியிடுகிறார்.

பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி உருவாக்கப்படும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார். பள்ளிகளில் எந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்? அதில் யாரையெல்லாம் பேச அனுமதிக்கலாம், அதற்கு என்ன விதிமுறைகள் என்பதை வரையறுக்க மிக விரைவில் கமிட்டி அமைக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்