டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இறுதி விடைத்தாள் நகலை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
|டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இறுதி விடைத்தாள் நகலை மற்றும் ஓ.எம்.ஆர். தாள் நகலை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முத்துலட்சுமி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முத்து செல்வம் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ந்தேதி வெளியிட்டு, இதற்கான எழுத்து தேர்வு ஜூன் 9-ந்தேதி நடந்த நிலையில், பணி நியமன அறிவிப்பிற்கு முன்பாக தேர்வர்களுக்கு இறுதி விடைத்தாள் மற்றும் ஓ.எம்.ஆர். தாள் நகலை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அண்மையில் நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் ஓ.எம்.ஆர். தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.