< Back
மாநில செய்திகள்
கிராமப்புற பொருளாதாரத்தை அழிவு நிலைக்கு கொண்டு செல்ல பாஜக அரசு முயற்சி - செல்வப்பெருந்தகை தாக்கு
மாநில செய்திகள்

கிராமப்புற பொருளாதாரத்தை அழிவு நிலைக்கு கொண்டு செல்ல பாஜக அரசு முயற்சி - செல்வப்பெருந்தகை தாக்கு

தினத்தந்தி
|
31 July 2024 2:02 AM IST

ராகுல்காந்திக்கு, தமிழக காங்கிரஸ் பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க, வாழ்வாதாரத்தை உயர்த்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு படிப்படியாக நிதியை குறைத்து பா.ஜனதா புறக்கணித்து வருகிறது. அதன்படி, 2021-22-ல் ரூ.98 ஆயிரத்து 467 கோடியாக இருந்தது, 2022-23-ல் ரூ.90 ஆயிரத்து 810 கோடியாகவும், 2023-24-ல் ரூ.70 ஆயிரம் கோடியாகவும், தற்போது 2024-25-ல் ரூ.86 ஆயிரம் கோடியாகவும் கடுமையாக நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. உலகத்திலேயே மிகப்பெரிய வேலை வாய்ப்பு திட்டமாக கருதப்பட்ட இந்த திட்டத்திற்கு மோடி அரசு மொத்த பட்ஜெட் தொகையான ரூ.48 லட்சம் கோடியில் 1.78 சதவிகிதம் தான் நிதி ஒதுக்கியிருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தை அழிவு நிலைக்கு கொண்டு செல்ல பாஜக அரசு முயற்சிக்கிறது.

தலைவர் ராகுல்காந்தி நேற்று (நேற்று முன்தினம்) மக்களவையில் ஆற்றிய உரையின் மூலம் மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாக பரிணமித்து பெருமை பெற்றிருக்கிறார். இதுவரை எவரும் கூறாத ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மோடி அரசை பொறுத்தவரை அதானி, அம்பானி உள்ளிட்ட பெரும் முதலாளிகளுக்கான அரசே தவிர, சமூகநீதி நோக்கம் கொண்ட அரசு அல்ல என்பதை ராகுல்காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். அவர் ஆற்றிய எழுச்சிமிக்க அற்புதமான உரையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்