< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரவுடியை சுட்டுப்பிடித்த எஸ்.ஐ. கலைச்செல்விக்கு பாராட்டு
|13 Aug 2024 1:20 PM IST
போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடியை எஸ்.ஐ. கலைச்செல்வி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.
சென்னை,
சென்னையில் பிரபல ரவுடி ரோகித் ராஜை பெண் போலீஸ் எஸ்.ஐ. கலைச்செல்வி துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். இதில் காயமடைந்த ரவுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல ரவுடி சிவக்குமார் கொலை உள்பட 3 கொலை வழக்குகளில் ரோகித் ராஜுக்கு தொடர்பு உள்ளது. இந்நிலையில் இன்று போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது எஸ்.ஐ. கலைச்செல்வி அவரை சுட்டு பிடித்தார். ரவுடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் ரவுடியை துணிச்சலாக துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த எஸ்.ஐ. கலைச் செல்வியை சென்னை காவல் ஆணையர் அருண் பாராட்டினார்.