< Back
மாநில செய்திகள்
தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவராக கனிமொழி நியமனம்
மாநில செய்திகள்

தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவராக கனிமொழி நியமனம்

தினத்தந்தி
|
10 Jun 2024 9:21 PM IST

தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தி.மு.க. நாடாளுமன்ற குழு (மக்களவை, மாநிலங்களவை) தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை குழு துணைத் தலைவராக தயாநிதிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை கொறடாவாக ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை குழு துணைத் தலைவராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை கொறடாவாக வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. நாடாளுமன்ற பொருளாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்