< Back
மாநில செய்திகள்
விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல்
மாநில செய்திகள்

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல்

தினத்தந்தி
|
21 Jun 2024 3:21 PM IST

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பலர் வாங்கிக்குடித்துள்ளனர். இதில் பலருக்கு கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு முதல் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

விஷ சாராயம் குடித்து தற்போதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக திருமாவளவன் வழங்கினார்.

மேலும் செய்திகள்