< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி சம்பவம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
22 Jun 2024 9:33 PM IST

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சென்னை,

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்த பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்தை திமுக அரசு தடுக்கத்தவறியதாகவும் கூறி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீட்கெட்டு இருப்பதாக கூறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, கோவை, கள்ளக்குறிச்சி, நெல்லை, திருச்சி, மதுரை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது ஒருசில பகுதிகளில் பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அனுமதியின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்