< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
|5 Aug 2024 11:23 AM IST
முதல்-அமைச்சருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சென்னை,
சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொளத்தூரில் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதல் அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல, ஜி.கே.எம். காலனியில் தொடக்கப்பள்ளி அடிக்கல் நாட்டு விழா மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகளை தொடங்கி வைக்கிறார். மேலும், கொளத்தூர் நேர்மை நகரில் கட்டப்படும் வணிக வளாகத்தை முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார்.
கொளத்தூர் தணிகாசலம் கால்வாய் புனரமைப்பு பணிகளையும் முதல் அமைச்சர் பார்வையிடுகிறார். அப்போது முதல்-அமைச்சருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.