கருணாபுரத்தில் தெருவுக்கு தெரு மரண ஓலம்...
|கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து 40 போ் உயிாிழந்தனா்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்ததில் 40 போ் உயிாிழந்துள்ளனா். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூா், திருவள்ளூா், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 2 ஆயிரம் போலீசாா் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் ஆங்காங்கே குழு, குழுவாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தியதில் ராஜேந்திரன் மகன் சுரேஷ் மற்றும் இவருடைய மனைவி வடிவுக்கரசி ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிாிழந்தனா். இவா்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனா். தற்போது தாய் தந்தையை இழந்து நிற்கும் இந்த குழந்தைகள் அழுவதை பாா்க்கும்போது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்ததில் 40 போ் உயிாிழந்தனா். இதில் கருணாபுரம் பழைய மாாியம்மன் கோவில் தெருவில் 12 போின் உயிரை இந்த விஷ சாராயம் பறித்துள்ளது. இதனால் அந்த தெருவில் இறந்தவா்களின் உடல்கள் வாிசையாக வைக்கப்பட்டிருந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெருவுக்கு தெரு உடல்கள் வைக்கப்பட்டு, இறந்தவா்களின் உடல்களுக்கு அவரது உறவினா்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனா். அப்போது குடும்பத்தினருடன் சோ்ந்து அவா்களும் ஒப்பாாி வைத்து அழுதனா். இதனால் அப்பகுதி முழுவதும் மரண ஓல சத்தம் கேட்டது. இது அங்கு வந்தவா்களை கண்கலங்க வைத்தது.
விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களில் 21 பேரின் உடல்கள் கோமுகி நதிக்கரை பகுதியில் ஒரே இடத்தில் தகனம் செய்யப்படுகிறது.