மு.க.ஸ்டாலினின் பேரும், புகழை பார்த்து கோபாலபுரத்து விசுவாசியான நான் அழுதேன்: துரைமுருகன்
|மு.க.ஸ்டாலினின் பேரும், புகழை பார்த்து கோபாலபுரத்து விசுவாசியான நான் அழுதேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னை,
திமுக முப்பெரும் விழாவில் அமைச்சரும், பொதுச்செயலாளருமான துரைமுருகன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை விட இளையவர். ஆனாலும் இன்றைக்கு பெற்றுள்ள பேரும், புகழும் அவரை எங்கேயோ கூட்டிக்கொண்டு போயிருக்கிறது. அமெரிக்காவுக்கு அவர் சென்றபோது, அங்குள்ள தமிழர்கள் வாழ்த்திய வாழ்த்து, தொழில் அதிபர்கள் காட்டிய அன்பு அளப்பரியது. அங்கு நான் ஒரு திராவிடன், பிற்படுத்தப்பட்டவன் என்று சொல்லாமல், நிமிர்ந்து நின்று தமிழகத்தின் பெருமையை உயர்த்திவிட்டு வந்திருக்கிறார்.
அந்த காட்சியை கோபாலபுரத்து விசுவாசியான நான் பார்த்து அழுதேன். கருணாநிதி மட்டும் இப்போது இருந்திருந்தால் இதை பார்த்து எப்படி மகிழ்ச்சி அடைந்திருப்பார்? என்று எனக்கு தெரியும். நீங்கள்தான் (மு.க.ஸ்டாலின்) எங்கள் ரட்சகன். நீங்கள்தான் திமுகவின் கர்த்தா. நீங்கள் தான் தமிழர்களை பாதுகாக்கக்கூடியவர். இவ்வாறு அவர் பேசினார்.