< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இந்தியாவின் நம்பர் ஒன் மாநகராட்சியாக நெல்லையை மாற்றுவேன் - நெல்லை புதிய மேயர் பேட்டி
|5 Aug 2024 3:17 PM IST
வாக்குப்பதிவில் 54 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சைக்கிளில் செல்லும் சாதாரண ஒரு தொண்டனை நெல்லை மேயராக ஆக்கியிருக்கிறார்கள். இந்தியாவின் நம்பர் ஒன் மாநகராட்சியாக நெல்லையை மாற்றுவேன். எனக்கு வாக்களிக்காத மாமன்ற உறுப்பினர்களும் என்னுடைய சகோதரர்கள்தான் என எண்ணி 55 வார்டுகளும் என்னுடைய வார்டாக நினைத்து பணியாற்றுவேன்.
45 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றி வந்த சாதாரண தொண்டனை மாநகராட்சி மேயராக ஆக்கியுள்ளனர். 24 மணி நேரமும், 55 வார்டுகளுக்கும் சுத்தமான குடிநீர், சாலை, கழிவுநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவேன். சவால் என்ற வார்த்தையே இந்த மாநகராட்சியில் இருக்காது என்றார்.
வாக்குப்பதிவில் 54 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.