< Back
மாநில செய்திகள்
தங்கும் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
மாநில செய்திகள்

தங்கும் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
9 Jun 2024 3:40 PM IST

கணவன்-மனைவி இருவரும் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர்.

திருச்செந்தூர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாக்கிய ஈஸ்வரன் (வயது 49). பஞ்சு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வசந்தலட்சுமி (42). இவர்கள் கடந்த 6-ந் தேதி திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அறைக்கு வந்தனர்.

நேற்று காலை வெகு நேரம் ஆகியும் அறை கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள் கதவை தட்டினார்கள். அப்போதும் கதவு திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாக்கிய ஈஸ்வரன், வசந்தலட்சுமி ஆகியோர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக திருச்செந்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடன் தொல்லை காரணமாக 2 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கும் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்