< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்த மணமகனுக்கு மருத்துவமனையில் திருமணம்
மாநில செய்திகள்

விஷம் குடித்த மணமகனுக்கு மருத்துவமனையில் திருமணம்

தினத்தந்தி
|
26 July 2024 8:43 AM IST

திருமணத்திற்கு மறுத்து விஷம் குடித்த மணமகனுக்கு அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் திருமணம் நடந்தது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கிருஷ்ணாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). இவருக்கும் ஆற்காடு தாலுகா கரிக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த லாவண்யாவுக்கும் (வயது 19) திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தினேஷ் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று காலை ரத்தினகிரி முருகன் கோவிலில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஆனால் மணமகன் தினேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் எறும்பு மருந்து மற்றும் மாத்திரைகளை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து மணமகன் மற்றும் அவரின் பெற்றோர் சம்மதத்துடன் ஆற்காடு அரசு மருத்துவமனை வளாகத்தில் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் தினேஷ், லாவண்யா திருமணம் நடைபெற்றது. பின்னர் தினேசை ஆம்புலன்ஸ் மூலம், அவரது மனைவியுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்